செய்திகள்

பிரபல சீரியல் ஜோடி விவாகரத்தா?

பிரபல சீரியல் ஜோடி விஷ்ணு காந்த் - சம்யுக்தா விவகாரத்து செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

DIN

பிரபல சீரியல் ஜோடி விஷ்ணு காந்த் - சம்யுக்தா விவகாரத்து செய்யவுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில்  சிப்பிக்குள் முத்து சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் நடிகர் விஷ்ணு காந்த் திருமணமான ஒரு மாதத்தில் விவாகரத்து செய்யவுள்ளதாக, தற்போது சமூக வலைதளங்களில் தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஷ்ணு காந்த் - சம்யுக்தா இருவரும் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தங்களது திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் இருவரும் சேர்ந்து நடித்தனர். விஷ்ணு காந்த் மற்றும் சம்யுக்தா  தங்கள் காதல் செய்தியை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

அதன் பின்னர், கடந்த மாதம் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், இருவரும் தங்களது திருமண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளனர்.

விஷ்ணு காந்த் அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், "மௌனம் வெறுமையல்ல, அது "உண்மை" மற்றும் "பதில்" நிறைந்தது.." என்று தெரிவித்துள்ளார். எனினும் விவாகரத்து குறித்து அவர்கள் இருவரும் எந்த கருத்தும் அதிகார்வபூர்வமாக இதுவரை வெளியிடவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்!

அக்டோபரில் இயல்பைவிட 36% கூடுதல் மழை!

போரில் பாகிஸ்தானுக்கு உதவிய துருக்கி! இந்தியா பதிலடி!

முடிந்தவர்கள் 6-8 வாரங்கள் தில்லியை விட்டு வெளியேறுங்கள்! மருத்துவர் அறிவுரை

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு: 21 பேர் பலி!

SCROLL FOR NEXT