ஜவானுக்காக தமிழில் பாடிய ஷாருக்கான்!
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அ
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
தற்போது, இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர் ஒருவர் டிவிட்டரில் நடிகர் ஷாருக்கானிடம், ‘அட்லி உங்களை தமிழ் கற்க வைத்தாரா? எனக் கேள்வியெழுப்பியிருந்தார். இதற்கு ஷாருக்கான், ‘அட்லியும் அனிருத்தும் என்னை தமிழில் பாட வைத்துள்ளனர். அதைச் சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்’ என பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க: வீரன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ஜவானில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசை - அனிருத்.
மேலும், நடிகர் விஜய் கௌரவ தோற்றத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.