முகப்பு
செய்திகள்

தல சாஞ்சுருச்சே: இராவண கோட்டம் படத்தின் வைரலாகும் புதிய விடியோ! 

இராவண கோட்டம் படத்தின் புதிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:56 PM
பகிர்:

பிரபல இயக்குநர் நடிகருமான பாக்யராஜின் மகன் ஷாந்தனு சக்கரகட்டி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். விஜய்யின் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சோனி இணையத் தொடரில் (ஸ்டோரி ஆஃப் திங்ஸ்) ஒன்றிலும் நடித்துள்ளார். 

தற்போது, கண்ணன் ரவி தயாரிப்பில் ‘இராவண கோட்டம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தினை ‘மதயானைக் கூட்டம்’ பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கியுள்ளார். கயல் ஆனந்தி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். 

இந்தப்படத்தின் டிரைலர் நல்ல கவனம் பெற்றது.மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளதாக நடிகர் ஷாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். 

இந்நிலையில் ‘தல சாஞ்சுருச்சே’ எனும் புதிய ப்ரோமோ விடியோ வெளியாகியுள்ளது. இதில் முத்துராமலிங்க தேவர், அம்பேத்கர் காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த விடியோ சமூக வலைதளங்களில்  வைரலாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.