செய்திகள்

கஸ்டடி படத்தின்  மிரள வைக்கும் மேக்கிங் விடியோ வெளியீடு

கஸ்டடி படத்தின் மிரள வைக்கும் புதிய மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

DIN

கஸ்டடி படத்தின் மிரள வைக்கும் புதிய மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் உருவாகி வரும் கஸ்டடி. இந்த திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

மன்மதலீலை திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் வெங்கட் பிரபு தெலுங்கில் இயக்கிவரும் திரைப்படம் கஸ்டடி. நாக சைதன்யா நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரீத்தி ஷெட்டி நடிக்க, ஜீவா வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இணைந்து இசையமைக்கின்றனர். ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் இந்தப் படத்தில் பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி, வெண்ணிலா கிஷோர், அரவிந்தசாமி ஆகியோர் நடிக்கின்றனர். 

இந்த நிலையில், நாக சைதன்யா மற்றும் க்ரீத்தி ஷெட்டி இருவரும் நீருக்கு அடியில் மூழ்கியபடி நடிக்கும் மிரளவைக்கும் காட்சியின் மேக்கிங் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குற்றப் புலனாய்வில் ஏ.ஐ. தொழில்நுட்பம்

திமுகவை கூட்டணி கட்சிகளே வீழ்த்தும்: அன்புமணி

ஆஸ்திரியாவுக்கு கடத்தப்பட்ட தொன்மையான கோயில் கல்தூண் மீட்பு நடவடிக்கை தீவிரம்!

சாலையில் வாகனத்தை சரிபாா்த்து கொண்டிருந்த டெம்போ ஓட்டுநா் காா் மோதி உயிரிழப்பு!

மக்களவையில் மோதலைத் தவிா்த்து கண்ணியம் காத்தது ஆளும் கூட்டணி: கிரண் ரிஜிஜு

SCROLL FOR NEXT