செய்திகள்

மொய்தீன் பாயாக நடித்திருக்க வேண்டிய சூப்பர் ஸ்டார் இவர்தான்!

லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள சிறப்பு தோற்றத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

DIN


லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள சிறப்பு தோற்றத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

லால் சலாம் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு திருவண்ணாமலையில் முடிவடைந்த நிலையில், தற்போது மும்பையில் ரஜினி நடிக்கவுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 நிமிடங்கள் இப்படத்தில் ரஜினியின் காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தில் ரஜினி, மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இக்கதாபாத்திரத்தில் முதலில் மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டியை நடிக்க வைக்க ஐஸ்வர்யா பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் கதை பிடித்ததால் ரஜினி தான் நடிப்பதாக ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT