செய்திகள்

விஷால், சுனிலின் பகுதிகள் நிறைவு: மார்க் ஆண்டனி படக்குழு அறிவிப்பு! 

நடிகர் விஷாலின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக மார்க் ஆண்டனி படக்குழு தெரிவித்துள்ளது. 

DIN

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ‘திரிஷா இல்லனா நயன்தாரா' படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை இயக்கினார்.

இப்படத்தில் சுனில், செல்வராகவன், கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ரிது வர்மா, அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் டைம் டிராவலை மையமாக எடுக்கப்பட்ட படமாகத் தெரிகிறது. விஷால் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்தப் படத்தின் டீசர் வெளியானது. தற்போது நடிகர் விஷால், பிரபல தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோரின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. விரைவில் திரைக்கு வருமெனவும் இதில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT