செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாவில் சாகுந்தலம் விருது பெற்றதா? 

நடிகை சமந்தா நடிப்பில் உருவான சாகுந்தலம் திரைப்படத்திற்கு கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளது.  

DIN

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றிருந்தார்.

மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்திருந்தனர். 

ஏப்ரல் 14ஆம் தேதி வெளியான சாகுந்தலம் கிட்டத்தட்ட ரூ.70 கோடி பொருள் செலவில் உருவாக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளுக்கு விற்பனை செய்ததன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35 கோடி வருமானம் பெற்றது. தொலைக்காட்சி சானல்கள் மூலம் சில கோடி வருவாய் ஈட்டப்பட்டிருக்கலாம். எப்படிப் பார்த்தாலும் படக் குழுவுக்கு ரூ.20 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம் என்றுதான் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில் சாகுந்தலம் படக்குழுவிற்கு ஆசுவாசம் தரும் விதமாக கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் பல்வேறு விருதுகள் கிடைத்துள்ளன. 

சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக காஸ்டியூம் டிசைனர் நீதா லுல்லாவிற்கு கிடைத்தது. மேலும் சிறந்த இந்திய திரைப்படத்திற்காகவும் விருது கிடைத்தது. 

பலரும் நினைப்பது போல இது கேன்ஸ் திரைப்பட விழா (Festival de cannes) கிடையாது. கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில்தான் (Cannes World Film Festival) சாகுந்தலம் படத்திற்கு விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னது 75 வருட பாரம்பரியம் உடையது; வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும். பின்னது மாதம் மாதம் நடைபெறும் நிகழ்ச்சிகளை கொண்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

ரூ.200.66 கோடியில் புனரமைக்கப்பட்ட பாலாறு அணைக்கட்டு: முதல்வா் திறந்து வைத்தாா்

குழப்பங்கள் நீங்கும் தனுசு ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT