செய்திகள்

பிரபாஸ் படங்களிலேயே இதுதான் அதிகம்: தெலுங்கில் அதிக தொகைக்கு வியாபாரமான ஆதிபுருஷ்?

DIN

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ, ராதே ஷ்யாம்  ஆகிய படங்களில் நடித்தார் பிரபாஸ். பாகுபலி 2 படத்துக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தன்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்கிற 3டி படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கானுடன் இணைந்து நடித்துள்ளார் பிரபாஸ். க்ரித்தி சனோன் சீதையாக நடித்துள்ளார். 

ஹிந்தி, தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் வெளியாகவுள்ளது. பலரும் இதன் சிஜி காட்சிகளை விமர்சித்தனர். எனவே, படத்தின் சில காட்சிகள் மீண்டும் படப்பிடிப்பு செய்து கிராபிக்ஸ் செய்யப்பட்டதை தொடர்ந்து,  2023 ஜூன் 16 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

தெலுங்கு திரையரங்க உரிமைக்காக ரூ.170 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபாஸின் முந்தைய படங்களை விடவும் இதுதான் அதிகம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்று வெளியான ராம் சீதா ராம் பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடி 3.O: 4 பெரிய மாற்றங்கள் ஏற்படும் - பிரஷாந்த் கிஷோர் கணிப்பு!

தாய்லாந்தில் மடோனா!

ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சு ஆலோசகராக சிஎஸ்கே முன்னாள் வீரர் நியமனம்!

ஹைதராபாத்தில் கார் பதிவெண்ணுக்கு ரூ.25 லட்சம்!

குவாலிஃபையர் 1: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT