முகப்பு
செய்திகள்

மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்!

மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

Updated On : 31 மே, 2023 at 12:50 PM
பகிர்:

மாமன்னன் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்கிற படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். நீண்ட நாள்களாக தயாரிப்பிலிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது.

மேலும், இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கிறார்.

Advertisement

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வடிவேலு பாடிய பாடல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.

மாமன்னன் படத்தின் ஏ.ஆர்.ரகுமான் பாடிய பாடல் இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாளை(ஜூன்.1) சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாமன்னன் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.