செய்திகள்

விக்ரம் ஈடுபாட்டைப் பார்த்து பயந்தேன்: பா.இரஞ்சித்

தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் கடின உழைப்பைக் கொடுத்ததாக இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

DIN

பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படத்தில் நடிகர் பசுபதி,  மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்திற்காக தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இதையும் படிக்க: உலக அழகிக்கு 50 வயது!

இந்நிலையில், இன்று தங்கலான் திரைப்படத்தின் டீசரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். விக்ரமின் தோற்றமும் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பா.இரஞ்சித், “அனைவரும் கஷ்டப்பட்டுதான் உழைக்கிறோம். ஆனால், ஒரு கலைஞனாக நாம் கொடுக்கும் ஈடுபாடு முக்கியம். விக்ரம் சாரிடம் படப்பிடிப்பில் அந்தக் கடின உழைப்பையும் அவரின் ஈடுபாட்டையும் கண்டேன். திரைத்துறையில் இத்தனை ஆண்டுகள் இருந்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க அவர் எடுக்கும் முயற்சிகள் ஆச்சரியத்தைத் தருகிறது. விலா எழும்பு உடைந்த பின்பும், அவர் சண்டைக் காட்சிகளில் ஆர்வத்தைக் காட்டினார். உண்மையில், விக்ரம் சாரின் ஒத்துழைப்பை நினைத்தால் பயமாக இருக்கிறது. தங்கலான் உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

மொச்சை பட்டாணி சுண்டல்

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

SCROLL FOR NEXT