செய்திகள்

சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான்; நான் மக்களின் தளபதி: விஜய்யின் அதிரடி பேச்சு! 

லியோ வெற்றி விழாவில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

DIN

லியோ திரைப்படம் கடந்த அக்.19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்படம்  வெளியான 12 நாள்களில் உலகளவில் ரூ.540 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

படத்தின் பிரமாண்ட வெற்றியை கொண்டாடும் விதமாக இந்த வெற்றி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தொடங்கிய சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த விழாவில் நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் குறித்து பேசியதாவது: 

புரட்சித்தலைவர் என்றால் அது ஒருத்தர்தான்.. நடிகர் திலகம் என்றால் அது ஒருத்தர்தான். புரட்சிக் கலைஞர் என்றால் அது ஒருத்தர்தான். உலக நாயகன் என்றால் அது ஒருத்தர்தான். சூப்பர் ஸ்டார்னா ஒருத்தர்தான். தல என்றால் அதுவும் ஒருத்தர்தான். நான் தளபதி. தளபதி என்றால் என்ன? அரசருக்கு கீழ் இருப்பவன். மக்களாகிய நீங்கள்தான் அரசன். உங்களுக்கு கீழ் நான் தளபதியாக இருக்கிறேன் எனப் பேசினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT