செய்திகள்

ரஜினியைத் தாக்கினாரா ரத்னகுமார்?

லியோ பட வெற்றி விழாவில் நடிகர் ரஜினியை, இயக்குநர் ரத்னகுமார் தாக்கி பேசிய கருத்துகள் சர்ச்சையானதால், அவர் சமூக ஊடகங்களில் இருந்து தற்காலிகமாக  விலகுவதாக அறிவித்துள்ளார்.

DIN

மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார், மாஸ்டர், விக்ரம் லியோ உள்ளிட்ட படங்களுக்கு எழுத்தாளாராகவும் பணிபுரிந்து உள்ளார். 

லியோ படத்தின் வெற்றி விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று (நவ.1) நடைபெற்றது. இவ்விழாவில்  இதில் விஜய், திரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், மன்சூர் அலிகான், ரத்னகுமார் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

அதில் ரத்னகுமார் பேசும் போது, ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே இறங்கி வந்தாக வேண்டும்’ எனக் குறிப்பிட்டார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் காக்கா, கழுகு கதையை ரஜினி பேசியிருந்த நிலையில், ரஜினியை தாக்கி பேசியதாக ரத்னகுமாருக்கு எதிராக கடும்  விமரிசனங்கள் எழுந்தது.

இந்த நிலையில், ரத்னகுமார் அவரது எக்ஸ் பக்கத்தில் அடுத்தப்பட அறிவிப்பு வரும்வரை சமூக ஊடங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.

ரத்னகுமார் நேற்று பேசியதற்கு தொடர்ந்து அவர் மீது விமரிசனங்கள் தொடர்ந்து வருவதால்தான் சமூக ஊடங்களில் இருந்து விலகியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கஞ்சா கடத்திய 2 போ் சிறையில் அடைப்பு

இணையவழியில் முதலீடு ஆசை காட்டி ரூ.78 லட்சம் மோசடி

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் தேவாலயத்தில் சீரமைப்புப் பணிகள்: முதல்வா் ஆய்வு

மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

SCROLL FOR NEXT