முகப்பு
செய்திகள்

கர்ப்பமாக இருந்த சின்னத்திரை நடிகை உயிரிழப்பு!

நிறைமாத கர்ப்பமாக இருந்த மலையாள சின்னத்திரை நடிகை பிரியா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:15 AM
பகிர்:

நிறைமாத கர்ப்பமாக இருந்த மலையாள சின்னத்திரை நடிகை பிரியா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் பிரபல தொலைக்காட்சி தொடரான கருத்தமுத்துவின் நடித்து பிரபலமானவர் பிரியா(வயது 35). இவர் பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து இடைவெளி எடுத்து கொண்ட பிரியா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வருகிறார். 8 மாதம் கர்ப்பமாக இருந்தார்.

Advertisement

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்ட பிரியாவை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சைப் பலனின்று உயிரிழந்தார்.

பிரியாவின் கருவில் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் உயிருடன் மீட்ட மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடிகை ரென்ஜுஷா மேனன் உயிரிழந்த நிலையில், பிரியாவின் இழப்பு மலையாள திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments