செய்திகள்

ரஜினி - 171 படத்தில் ராகவா லாரன்ஸ்?

நடிகர் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள படத்தில் ராகவா லாரன்ஸ் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

DIN

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் ரஜினிகாந்த்துடன் சன் பிக்சர்ஸ் இணைகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தினை முடித்துள்ளார். இந்தப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. தற்போது லோகேஷ் கன்கராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரஜினியுடன் இணைந்து நடிக்க ராகவா லாரன்ஸ் விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்கஜ் திரிபாதி மீது காதல்... மனம் திறந்த எம்.பி. மஹுவா மொய்த்ரா!

ஆக. 21, மதுரையில் தவெக மாநாடு: விஜய்

அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி: டிரம்ப்

ஏமாற்றமளித்தாலும் நியாயமான முடிவே கிடைத்துள்ளது: பென் ஸ்டோக்ஸ்

மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சி! நாடாளுமன்றத்தில் தீர்மானம்!

SCROLL FOR NEXT