செய்திகள்

எனது வாழ்க்கையின் திருப்புமுனை இந்தப்படம்தான்: கஜோல் நெகிழ்ச்சி பதிவு! 

DIN

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த கஜோலின் படங்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. தமிழில் நடிகர் பிரபு தேவா நடித்த ‘மின்சார கனவு’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். பின், நடிகர் அஜய் தேவ்கனை மணந்து பாலிவுட் படங்களில் முழு கவனத்தைக் கொடுத்தார்.

தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி -2 படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். 'தி ட்ரையல்' எனும் புதிய படத்திற்காக இன்ஸ்டாகிராம் பதிவுகளை அழித்து அவர் செய்த புரமோஷனை பலரும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. 

பின்னர் லஸ்ட் ஸ்லோரிஸ் 2இல் நடித்து மீண்டும் சமகாலத்தில் வைரலாகியுள்ளார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது சினிமா, வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் குறித்து உருக்கமான பதிவினை எழுதியுள்ளார். 

"உதார் கி ஜிந்தகி படம் வெளியாகி இன்றோடு 29 ஆண்டுகள் ஆகின்றன. இந்தப் படத்துக்கு சுருக்கப்பட்ட வேறு பெயர்கள் எதுவுமில்லை. இந்தப்படம் பெரும்பாலான மக்கள் நினைவுகளில் இருக்காது. ஆனால், இந்தப்படம் எனது வாழ்கை மற்றும் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது. சினிமாவை தாண்டி பல விஷயங்களினால் நான் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தேன். அதை மாற்றவேண்டியிருந்தது. 20 வயதில் நான் எடுத்த முக்கியமான முடிவாக இதைப் பார்க்கிறேன்.

சிறப்பாக நடிக்க எனக்கு சிறிது காலம் ஓய்வு தேவைப்பட்டது. எனது மனதின் (ஆன்மாவின்) பங்கு அதிகம் தேவைப்படாத படங்களில் நடித்தேன். என்னை நானே இன்னும் சிறப்பாக நிலைநிறுத்திக்கொள்ள இதெல்லாம் தேவைப்பட்டது. குறிப்பாக எனக்கு தனிப்பட்ட முறையில் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொண்டேன். அப்போதுதான் என்னால் அதிகமான ஈடுபாட்டினை சினிமாவில் கொடுக்க முடியும் எனக் கற்றுக் கொண்டேன். அதை இன்றுவரை பழக்கப்படுத்தி வருகிறேன். அதன் நினைவுகளால் இன்றைய நாளில் இந்தப்பதிவு தேவைப்பட்டது. இந்த அதிவேகமான உலகில் இது அனைவருக்கும் மட்டுமல்லாமல் எனக்குமே ஒரு நினைவூட்டலாக இருக்கும்" எனக் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து: அவசரகால கதவை உடைத்து மீட்கப்பட்ட பயணிகள்!

மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ஆபத்தானது:மோடி!

பறக்கும் உயிர்! ஹன்சிகா..

சென்னைக்கு மழை எப்போது? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு

சூர்யா - 44 இசையமைப்பாளர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT