செய்திகள்

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: என்ன சொல்கிறார் மிருணாள் தாக்குர் 

தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக உளவி வரும் தகவல்களை நடிகை மிருணாள் தாக்குர் மறுத்துள்ளார். 

DIN

தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கடந்த சில நாட்களாக உளவி வரும் தகவல்களை நடிகை மிருணாள் தாக்குர் மறுத்துள்ளார். 

சீதா ராமம் திரைப்படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை மிருணாள் தாக்குர். காதலை மையமாகக் கொண்டு உருவமான இந்த படம் 1964-ம் ஆண்டு நடப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் வெற்றி மிருணாள் தாக்குருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது. இருப்பினும் அவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களுக்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். 

தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘ஹாய் நான்னா’ என்கிற படத்திலும் அவர் நடித்து வருகிறார். விரைவிலேயே சிவகார்த்திகேயன் படத்திலும் மிருணாள் தாக்குர் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதுதொடர்பான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் நடிகை மிருணாள் தாக்குர் திருமணம் குறித்து கடந்த சில நாட்களாக தகவல் ஒன்று உளவி வருகிறது. 

அதாவது, விரைவிலேயே அவர், தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்பதுதான். ஆனால் இந்த தகவலை மிருணாள் தாக்குர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். என்னுடைய திருமணம் பற்றி பரவி வரும் தகவல் முற்றிலும் தவறான வதந்தி. நானும் அந்த நடிகர் யார் என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும், இது மிகவும் வேடிக்கையானது.

இந்த வதந்தி எவ்வளவு வேடிக்கையானது என்பதை என்னால் வெளிப்படுத்த முடியாது. ஆனால், விரைவில் திருமணம் செய்து கொள்வேன். இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

உனது கண்களில்... ரவீனா தாஹா!

SCROLL FOR NEXT