செய்திகள்

40 ஆண்டுகளுக்குப் பின் மணிரத்னம் எடுத்த முடிவு!

DIN

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இதற்கான, கதை - திரைக்கதை பணிகளையும் மணிரத்னம் முடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தக் லைஃப் படத்திற்கான பெயர் அறிவிப்பு விடியோவை நேற்று (நவ.6) படக்குழு வெளியிட்டிருந்தது. வெளியாகி 19 மணிநேரங்களே ஆன நிலையில் இதுவரை இந்த விடியோ 1.5 கோடிப் பார்வைகளைக் கடந்து அசத்தியிருக்கிறது.

கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகிய ஜாம்பவான்கள் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த வரவேற்புக்கு இடையே கவனிக்கப்பட வேண்டியது படத்தின் பெயர். 1983 ஆம் ஆண்டு 'பல்லவி அனுபல்லவி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணிரத்னம், கடந்த 40 ஆண்டுகளில் தான் இயக்கிய 25 படங்களில் ஒரு படத்திற்குக் கூட ஆங்கிலத்தில் பெயரை வைக்கவில்லை.

காரணம், நல்ல வாசிப்பாளரான மணிரத்னம் தமிழ் மொழியின் மீதும் பாரதியாரின் வரிகள் மீதும் ஈடுபாடு கொண்டவர். காற்று வெளியிடை போன்ற பாரதியின் வரியை படத்தின் பெயராகவும் வைத்திருக்கிறார். மேலும், பாரதியின் கவிதையை பாடலாகவும் தன் படங்களில் இணைத்திருக்கிறார். 

இந்நிலையில், இத்தனை ஆண்டுகள் கழித்து முதல்முறையாக கமல்ஹாசனுடன் இணையும் படத்திற்காக, ‘தக் லைஃப்’ என ஆங்கிலத்தில் பெயர் வைத்திருக்கிறார் மணிரத்னம்!

ஏன் இந்த முடிவை எடுத்தார் என  ரசிகர்கள் குழம்பினாலும் காலத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட இயக்குநர் எனப் பெயரைப் பெற்றவர், இந்த மாதிரி எதையாவது செய்யவில்லை என்றால்தான் ஆச்சரியம் என்கிறார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 9 மணி நிலவரம்!

ஜெய்ப்பூர் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

SCROLL FOR NEXT