முகப்பு
செய்திகள்

வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் ஹன்சிகா - புகைப்படங்கள்

நடிகை ஹன்சிகா தன் கவனத்தை மீண்டும் சினிமாத்துறையில் செலுத்தி வருகிறார்.

Updated On : 8 நவம்பர், 2023 at 3:12 PM
பகிர்:

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும், தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி  ஹன்சிகா, தொழிலதிபர் சோகேல் என்பவரை ஜெய்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார்.

இவர்களின் திருமண விடியோ ‘லவ் ஷாதி டிராமா’ என்கிற பெயரில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில்  வெளியாகியுள்ளது. 

Advertisement

இந்நிலையில், ஹன்சிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திருமணத்திற்குப் பின் நடிப்பதில் ஆர்வத்தைக் குறைத்த ஹன்சிகா, மீண்டும் அதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகிறாராம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.