செய்திகள்

காதலருடன் பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் நடிகை!

பிக்பாஸ், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ரெட்டி ஜோடி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் அமீர், பாவனி. அந்த நிகழ்ச்சியில் நடன இயக்குநரான அமீர், பாவனியிடம் தனது காதலை வெளிப்படுத்தினார். அந்த சீசனில் அவர்களின் காதல் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பாவனி - அமீர் இணை கலந்துகொண்டு வெற்றி பெற்றனர். அந்த நிகழ்ச்சியின் வெற்றியைத் தொடர்ந்து அமீரின் காதலை பாவனி ஏற்பதாக அறிவித்தார். 

பிக்பாஸ், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பொது நிகழ்ச்சிகளுக்கு பாவனி தனது காதலரான அமீருடன் வருகைபுரிவது வழக்கமாக மாறியது.

இந்நிலையில், பாவனி தனது பிறந்தநாளை காதலர் அமீருடன் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். சின்னத்திரை பிரபலங்களும் ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அமீர் தான் வெளியிட்டுள்ள பதிவில், என் வாழ்க்கையில் வந்ததற்கு மிகவும் நன்றி. அடுத்த ஆண்டு நாம் இருவரும் தம்பதிகளாக கரம் பற்றுவோம். நீ விரும்பும் இடங்களுக்கு கணவன் - மனைவியாகச் செல்வோம். இந்த ஆண்டு, இன்று என்னை மட்டும் ஏற்றுக்கொள். எல்லா விடியலிலும் உன்னை அதிகமாக நேசிக்கிறேன். உன்னை ஒருபோதும் வருத்தப்படவைக்க நான் விரும்புவதில்லை. ஆனால், அதில் நான் தோல்வியடைகிறேன். என் தவறுகளை மன்னித்துவிடு. என் இரும்பு மங்கைக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளார். 

2016ஆம் ஆண்டு ரெட்டை வால் குருவி தொடரில் நடிகை பாவனி அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2017-ல் சின்னத்தம்பி தொடரிலும் நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்கினத்திற்கு 8ஆம் இடத்தில் உள்ள கிரகங்களும் பலன்களும்!

யார் அழைப்பது..? -சாதிகா!

வைகோவை சந்தித்து நலம் விசாரித்தார் சீமான்

மெல்லினம்... ஈஷா ரெபா!

'மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக வந்திருக்கிறேன்' - கரூரில் கமல்ஹாசன் ஆய்வு!

SCROLL FOR NEXT