பிரதீப் ஆண்டனி 
செய்திகள்

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் செல்கிறாரா பிரதீப் ஆண்டனி?

பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸுக்குள் செல்வது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

DIN

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார் பிரதீப் ஆண்டனி. 

இந்த நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது. இது குறித்து பிரதீப் தனது சமூக ஊடகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பரபரப்புக்கு குறைவில்லாமல் நடந்து வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சக போட்டியாளர்களான மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, நிக்‌ஷன், சரவணன், கூல் சுரேஷ், விஷ்ணு ஆகியோர் உரிமைக் குரல் எழுப்பி தங்களுக்குப் பாதுகாப்பில்லை என பிரதீப் மீது குற்றச்சாட்டு முன்வைத்தனர். இதை கேட்ட கமல்ஹாசன் பிரதீப்பை அதிரடியாக வீட்டிலிருந்து வெளியேற்றினார்.

இந்த முடிவு நியாயமற்றது என அவரது ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

இது குறித்து பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ்  (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,    “நீங்கள் எனக்கு நல்ல விளையாட்டைக் கொடுத்தால் நான் உங்களுக்கு சிறந்த நிகழ்ச்சியை வழங்குவேன். முறையாக நடந்து கொள்வேன் என நான் சத்தியம் செய்கிறேன். ஒரு இடைவெளி முடிச்சிட்டு வர்ற படத்தோட இரண்டாவது பாதி போல பழிவாங்கி ஆடுறேன்” எனக் குறிப்பிட்டு விஜய் டிவி, கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை பதிவில் டேக் செய்துள்ளார்.

அதற்கு அடுத்த பதிவில், ”ரொம்ப ஷார்ப்-ஆன புள்ளிங்களால தான் அது முடியும். (தயாரிப்பு நிறுவனத்தைக் குறிப்பிட்டு) என்னை மீண்டும் உள்ளே அனுப்புவது  குறித்து யோசித்தால், எனக்கு இரண்டு போட்டியாளர்களை வெளியே அனுப்புவதற்கான இரண்டு ரெட் கார்ட்டுகள் வேண்டும். பிக் பாஸ் போட்டியில் நான் கேப்டனாக வேண்டும்” என நிபந்தனைகள் விதித்துள்ளார்.

அவர் இருந்தவரையிலான வாரங்களில் ஒரு முறை கூட பிரதீப் கேப்டனாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிப்ரவரி மாதப் பலன்கள் - துலாம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கன்னி

பெருமாநல்லூர் அருகே லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் பலி!

பிப்ரவரி மாதப் பலன்கள் - சிம்மம்

பிப்ரவரி மாதப் பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT