செய்திகள்

‘கேம் ஓவர்’ : பிரதீப் ஆண்டனி!

பிரதீப் ஆண்டனி மீண்டும் பிக்பாஸுக்குள் செல்வாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

DIN

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் பிரதீப் ஆண்டனி, மீண்டும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதீப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் வாரம் ஒரு போட்டியாளர் நாமினேஷன் முறையில் வெளியேற்றப்ப்டுவார். அந்த முறையில் இல்லாது சக போட்டியாளர்களின் குற்றச்சாட்டின் பேரில் அதிரடியாக வெளியேற்றப்பட்டார், பிரதீப் ஆண்டனி.

இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. பிரதீப் வெளியேற்றப்பட்டது நியாயமில்லை என ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வந்தனர்.

நவ.10-ம் தேதி, பிரதீப் சில நிபந்தனைகளை விதித்து தன்னை மீண்டும் போட்டியில் அனுமதிக்குமாறு பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்றைய எபிசோட்டுக்கான முன்னோட்டம் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் கமல்ஹாசன்  “தீர விசாரித்ததனாலே வந்த தீர்வு. இது தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். இது உலக நியதி” எனத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து பிரதீப் தனது பக்கத்தில், “கேம் ஓவர் (ஆட்டம் முடிந்தது) இரண்டு கை கால் இல்லைனா கூட பொழைச்சுக்குவேன் சார், கெட்ட பையன் சார் அவன், வாழ்த்திய மனங்களுக்கு என் வாழ்க்கையை வழங்கி விட்டேன் நல்லா இருங்க” எனப் பதிவிட்டுள்ளார்.

பிரதீப் ஆண்டனி, மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்த நிலையில் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT