முகப்பு
செய்திகள்

காதலியுடன் நிச்சயதார்த்தம்: காளிதாஸ் ஜெயராம் பகிர்ந்த புகைப்படங்கள்! 

பிரபல மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது நீண்டநாள் காதலியுடன் நிச்சயதார்த்தத்தை முடித்துள்ளர். 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:19 AM
பகிர்:

பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது. நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,  மாடலும் நடிகையுமான தாரணி காளிங்கராயருடன் இருக்கும் படத்தைப் பகிர்ந்திருந்தார். 

ஓணம் பண்டிகையின்போது நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படத்திலும் தாரணி உடனிருந்தார். அப்போதே காளிதாஸும் தாரணியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. பின்னர் இருவரும் காதலிப்பது உறுதியானது. 

இதையும் படிக்க: சித்தா: ஓடிடி அறிவிப்பு!

இந்நிலையில் தனது நீண்டநாள் காதலியுடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் காளிதாஸ். 

முழு கட்டுரையைப் படிக்க →