செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் படத்தின் டீசரை வெளியிட்ட சூர்யா!

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

DIN


இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ல ரிபெல் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ளார். 

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில், ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘ரிபெல்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் முன்னணி பாத்திரத்தில் நடித்துள்ளார். 

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.  மேலும், இப்படத்தில் மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ரிபெல் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே ரிபெல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிபெல் டீசரைப் பகிர்ந்துள்ளார். ரிபெல் டீசல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
 
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT