முகப்பு
செய்திகள்

ஒன் 2 ஒன் படத்தின் புதிய போஸ்டர்!

சுந்தர். சி, அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின் படக்குழுவினர் தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Updated On : 12 நவம்பர், 2023 at 2:32 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:50 AM

சுந்தர். சி, அனுராக் காஷ்யப் இணைந்து நடிக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வெளியிட்டுள்ளனர்.

24 HRS புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் கே. திருஞானம் எழுதி இயக்கியுள்ள 'ஒன் 2 ஒன்' படத்தில் சுந்தர். சி கதாநாயகனாகவும் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடித்துள்ளனர். 

இந்த படத்தின் சுந்தர்.சி மற்றும் அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.

Advertisement

இந்த படத்தில் ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் அதிரடியாக இதுவரையிலும் இல்லாத ஒரு வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர். சி நடித்துள்ளார். 

இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் வில்லன் கதராபாத்திரத்தை ஏற்றுள்ளார். 

இவர்களுடன் 'பரமபதம் விளையாட்டு' படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன், நடிகை நீது சந்த்ரா முக்கிய பாத்திரத்திலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் நடித்துள்ளனர். 

நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே. திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் கமர்ஷியல் படமாக இதனை இயக்கியுள்ளார்.

இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.