செய்திகள்

சல்மான் கானின் டைகர் 3: முதல் நாள் வசூலில் சாதனை! 

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கானின் ‘டைகர் 3’ திரைப்படம் முதல்நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. 

DIN

பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கானின் வெற்றி திரைப்படங்களில் ஒன்று டைகர். முதல் பாகத்தை தொடர்ந்து வெளிவந்த இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் தற்போது மூன்றாம் பாகமும் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கானுடன் கார்த்ரீனா கைப், எம்ரான் ஹாஸ்மி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஞாயிற்றுக் கிழமை வெளியான இந்தப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது. 

தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸ், “ஹிந்தியில் ரூ.43 கோடி (இந்தியாவில் ரூ.52.50 கோடி), வெளிநாடுகளில் ரூ.41.50 கோடி வசூலித்துள்ளது. உலகம் முழுவதும் ரூ.94 கோடி வசூலித்துள்ளது. ஹிந்தி சனிமா வரலாற்றில் தீபாவளிக்கு வெளியான படங்களிலேயே இதுதான் முதலிடம்” எனக் கூறியுள்ளார்கள். 

டைகர் படத்தின் தொடர்களிலும் சரி சல்மான் கான் படங்களிலும் சரி இதான் அதிகபட்ச முதல்நாள் வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெற்கு தில்லி: செப்டம்பரில் குற்றச் சம்பவங்கள் 20% குறைவு

தெலுகு டைட்டன்ஸை வீழ்த்தியது யு மும்பா

மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: இளைஞா் கைது

பாஜகவினா் பெருமாள் கோயிலில் அன்னதானம்

பள்ளிகளில் காலை உணவு: இயக்குநா் திடீா் ஆய்வு

SCROLL FOR NEXT