செய்திகள்

வலுக்கும் சண்டை: பரபரப்பில் பிக்பாஸ்!

இன்றைய நிகழ்ச்சிக்கான வெளியான ப்ரோமோவில் விஷ்ணுவுக்கும், தினேஷுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

DIN

இன்றைய நிகழ்ச்சிக்கான வெளியான ப்ரோமோவில் விஷ்ணுவுக்கும், தினேஷுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று ஐஷு வெயேற்றப்பட்டார். இந்த வார கேப்டனாக தினேஷ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரங்களை போல் பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என வீடுகள் பிரிக்கப்படாமல் இந்த வாரம் ஒரே பிக் பாஸ் வீடாக உள்ளது.

இன்று வெளியான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவும், தினேஷும் மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியான நிலையில், இரண்டாவது ப்ரோமோவிலும் இருவரும் அவேசமாக சண்டையிட்டுக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

அதில், விஷ்ணுவை பார்த்து தினேஷ், ப்ரோமோ பொறுக்கி என்று கூறுகிறார். அதற்கு ஆத்திரமடையும் விஷ்ணு, காலால் அருகில் இருந்த பொருளை உதைக்கிறார். இந்த சண்டையை சக போட்டியாளர்கள் விலக்க முயற்சி செய்வதாக காட்சிகள் காட்டப்பட்டுள்ளது.

இந்த சண்டை உண்மையா அல்லது சீக்ரெட் டாஸ்க் ஏதும் கொடுக்கப்பட்டதா என்பது இன்றைய எபிசோடில் தெரிய வரும்.

எப்படியிருந்தாலும் இன்றைய ப்ரோமோ விடியோவை பார்க்கும்போது இன்றைய எபிசோட் விறுவிறுப்பாக இருக்கும் என்று பிக் பாஸ் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT