செய்திகள்

காளிதாஸ் ஜெயராமின் ‘அவள் பெயர் ரஜ்னி’ டிரைலர்!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவான ‘அவள் பெயர் ரஜ்னி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

பாவக் கதைகள் இணையத் தொடரில் தங்கம் என்ற கதையில் சதார் என்ற திருநங்கையாக நடித்து அசத்தினார் காளிதாஸ் ஜெயராம். அந்தத் தொடர் அவருக்கு நல்ல நடிகர் என்ற பெயரைப் பெற்றுத்தந்தது. லோகேஷ் இயக்கத்தில் பெரும் வெற்றிபெற்ற விக்ரம் படத்தில் கமலின் மகனாக சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படத்திலும் காளிதாஸின் நடிப்பு கவனம் ஈர்த்தது.

தற்போது, ’அவள் பெயர் ரஜ்னி’ என்கிற படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார். நவரசா பிலிம்ஸ் தயாரிப்பில் வினில் ஸ்காரியா வர்கீஸ் இயக்கத்தில் உருவான இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

நமிதா பிரமோத் நாயகியாகவும் ரெப்பா மோனிகா, அஸ்வின் குமார், கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் பாணியில் உருவான இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகர ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

ஜன.23 முதல் நாகா்கோவில் - மங்களூரு ரயில் சேவை தொடக்கம்

வீட்டின் பூட்டை உடைத்து திருடிய இருவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

நவல்பட்டு காவல் ஆய்வாளா் பணியிட மாற்றம்

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தவருக்கு மூன்று ஆயுள்

SCROLL FOR NEXT