செய்திகள்

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஐஷுவின் முதல் பதிவு வைரல்!

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஐஷுவின் முதல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

DIN

பிக் பாஸில் இருந்து வெளியேறிய ஐஷுவின் முதல் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

​குறைந்த வாக்குகளைப் பெற்றதன் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  சென்ற வாரம் ஐஷு  வெளியேறினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஐஷு அவரது இஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், "இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் அனைவருக்கும் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். என்னை நம்பிய அனைவருக்கும் நான் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளேன். 

இந்த நிகழ்ச்சி என்னை நானே முடித்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிட்டது, ஆனால் என் பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் கடைசி நம்பிக்கையில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு நபரிடமிருந்தும், எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக்கூடாது என்பது குறித்து இந்த நிகழ்ச்சியில் நாம் நிறைய கற்றுக்கொள்கிறோம். நான் 'எப்படி இருக்கக்கூடாது' என்பதற்கு உதாரணம். இதற்கு நான் வருந்துகிறேன்

அர்ச்சனா, விச்சுமா, மணி அண்ணா, யுகேந்திரன் என்று பலர் என் தவறை திருத்த முயன்றனர். ஆனால் அதை நான் கேட்கவில்லை. அவர்களுக்கும் எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன். பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்ததற்கும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT