செய்திகள்

சமூக வலைதள விமர்சனங்கள் படத்தின் வசூலை பாதிப்பதில்லை: வெற்றிமாறன் 

DIN

இயக்குநர் பாலு மகேந்திராவின் பட்டரையில் இருந்து வந்த வெற்றிமாறனின் பொல்லாதவன் படம் அனைவரையும் கவர்ந்தது. ஆடுகளம் தேசிய விருது பெற்றது. விசாரணை படமும் மக்களிடம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றது. 

தனுஷுடன் அசுரன், வட சென்னை ஆகிய படங்கள் மிகுந்த வரவேற்பினை பெற்றது. அதிலும் அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூலித்தது. சமீபத்தில் நடிகர் சூரி நாயகனாக நடித்த விடுதலை படம் வெளியானது. விரைவில் இதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் யூடியூப் பக்கத்தில் தமிழ் சினமாவின் இயக்குநர்களுடன் சேர்ந்து நடந்த கலந்துரையாடலில், “7 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதள விமர்சனங்கள் மூலம் படத்தின் வசூல் பாதிக்கவில்லை. அது மிகவும் குறைவாக இருந்தது. தற்போது  அது சற்று கூடுதல் ஆகியிருக்கிறதே தவிர அப்போதும் அதன் சதவிகிதம் குறைவுதான்.  பொதுமக்களிடன் இந்த சமூக வலைதள விமர்சனங்கள் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக இயக்குநர்களிடம் பாதிப்பை ஏற்படுத்துகிறது” எனக் கூறியிருந்தார். 

சமூக வலைதளங்களில் இந்த விடியோ வைரலாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT