தமிழ் சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கி நுட்பமான கதைகளை இயக்கி வருபவர் இயக்குநர் மிஷ்கின்.
இசை மீது அதீத ஆர்வம் கொண்ட மிஷ்கின், சமீபத்தில் இசை பயிற்சியும் எடுத்துக்கொண்டார். டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமானார்.
மேலும், நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தும் வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தாக லியோ வெளியாக உள்ளது.
ஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கின் படத்துக்காக தயாராகி வருகிறாராம். கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாக உள்ளதாகவும் தகவல்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவான ‘பிசாசு - 2’ திரைப்படம் சில பிரச்னைகளால் இன்னும் வெளியாகாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.