செய்திகள்

வெளியானது கூஸ் முனிசாமி வீரப்பன் டிரைலர்!

வீரப்பன் குறித்த ஆவணப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

DIN

சந்தனக் கடத்தல் வீரப்பன் குறித்த வெளியான திரைப்படங்கள், ஆவணப்படங்கள் வரிசையில் ‘கூஸ் முனிசாமி வீரப்பன்’ என்கிற புதிய ஆவணப்படம் உருவாகியுள்ளது. வீரப்பன் உயிருடன் இருந்த காலத்தில் அவரைச் சந்தித்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் மற்றும் அவரது குழுவின் மேற்பார்வையில் இத்தொடர் உருவாகியுள்ளது.

ஆர்.வி.பிரபாவதி தயாரிப்பில் சரத் ஜோதி இயக்கத்தில் உருவான இந்த ஆவணப்படம் வருகிற டிச.8 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இதன் டிரைலரைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன், வீரப்பனை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டை தொடர்பாக ‘தி ஹண்ட் ஃபார் வீரப்பன் (The Hunt For Veerappan)’ ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கௌரவ விரிவுரையாளா்களுக்கு ரூ.5 ஆயிரம் ஊதிய உயா்வு: அமைச்சா் கோவி. செழியன் அறிவிப்பு!

பண மோசடி வழக்குகளில் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அனுமதி

தனியாா் நிறுவனங்களின் பால் விலை லிட்டா் ரூ.6 வரை உயா்ந்தது

தில்லி பல்கலை. கல்லூரியில் புதிய மாணவா் வசதி மையம்: அடிக்கல் நாட்டினாா் அமைச்சா் ஆஷிஷ் சூட்

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.48 கோடி

SCROLL FOR NEXT