செய்திகள்

இலக்குகள் அனைத்தும் உங்கள் தீரா புன்னகையின் வழி சாத்தியமாகட்டும்: அமைச்சர் உதயநிதிக்கு மாரி செல்வராஜ் வாழ்த்து!

இயக்குநர் மாரி செல்வராஜ் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனக்கே உரிய பாணியில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN

தமிழ்த் திரையுலகில் ‘பரியேறும் பெருமாள்’ என்கிற தனது முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். 

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களுக்கு அடுத்ததாக நான்காவது திரைப்படமாக வாழை படத்தினை, அவரே தயாரித்து இயக்கியுள்ளார்.

சிறுவர்கள் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா போன்றோரும் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு. 

நடிகர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக மாமன்னன் படம் அமைந்தது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனமும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பினையும் பெற்றது மாமன்னன் திரைப்படம். இந்தப் படத்துடன் நடிப்புக்கு ஓய்வை தெரிவித்து அமைச்சராக தனது பணியை தொடர்கிறார் உதயநிதி. 

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் வலைதளப் பதிவில், “இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின் சார். உங்கள் இலக்குகள் அத்தனையும் உங்கள் தீரா புன்னகையின் வழி சாத்தியமாகட்டும். மாமன்னன்” என வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தான் அதிபராகும் ராணுவத் தலைமைத் தளபதி? ராணுவம் விளக்கம்!

சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது: மொயின் அலி

ஐசிசி ஜூலை மாத விருதுக்கான போட்டியில் 3 கேப்டன்கள்! முச்சதம் விளாசிய முல்டருக்கு கிடைக்குமா?

கவின் கொலை வழக்கு: சுர்ஜித், தந்தையை காவலில் எடுக்க சிபிசிஐடி மனு!

எல்லைப் பிரச்னைக்குப் பின் முதல்முறை! சீனா செல்கிறார் பிரதமர் மோடி?

SCROLL FOR NEXT