செய்திகள்

மலேசிய குகைக் கோயிலில் சீரியல் நடிகை!

மகாநதி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க திவ்யா கணேஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், கோயிலுக்குச் சென்ற அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

DIN


மகாநதி தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்க திவ்யா கணேஷ் ஒப்பந்தமாகியுள்ள நிலையில், கோயிலுக்குச் சென்ற அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு மகாநதி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் நடிகை பார்த்திபா முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் லஷ்மி பிரியா, அனந்தராமன், ருத்ரன் பிரதீவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

பார்த்திபா - திவ்யா கணேஷ்

மகாநதி தொடரில் கங்கா பாத்திரத்தில் நடித்துவந்த பார்த்திபா, அத்தொடரிலிருந்து விலகியுள்ளார். மலையாள சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால், அவர் மகாநதியிலிருந்து விலகினார்.

நடிகை திவ்யா கணேஷ்

பார்த்திபாவுக்கு பதிலாக கங்கா பாத்திரத்தில் நடிக்க நடிகை திவ்யா கணேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதன்மூலம் மகாநதி தொடரில் திவ்யா கணேஷ் நாயகியாக நடிக்கவுள்ளார். 

மலேசிய குகைக்கோயில் முன்பு திவ்யா கணேஷ்

அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கார்த்திகை தீபத்தையொட்டி மலேசியாவிலுள்ள குகைக்கோயிலில் நடிகை திவ்யா கணேஷ் சாமி தரிசனம் செய்தார். அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

இன்று வங்கக் கடலில் உருவாகிறது புயல் சின்னம்

மாா்பக புற்றுநோய் கண்டறியும் முகாம்

SCROLL FOR NEXT