விஷால் 34 படத்தின் தலைப்பு வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் “விஷால் 34” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஹரி இயக்குவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014 இல் வெளியான பூஜை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், விஷால் 34 படத்தின் தலைப்பு வரும் டிச.1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.