அயலான் பட டீசர் குறித்த அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அயலான். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். படத்தை ரவிக்குமார் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை எனக் கூறப்படுகிறது. படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜனவரியிலேயே முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
ஏற்கனவே படத்திலிருந்து வேற லெவல் சகோ என்ற பாடல் வெளியானது.
படம் அடுத்த 2024 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அயலான் பட டீசர் குறித்த அப்டேட்டை நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
அதன்படி படத்தின் டீசர் வரும் 6-ம் தேதி வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.