செய்திகள்

எதிர்நீச்சல்: வேல ராமமூர்த்தியேதான்!

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிப்பவர் வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. 

DIN

எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்துவுக்கு பதிலாக நடிப்பவர் வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. 

சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான எபிஸோட் மூலம் ரசிகர்களிடயே எழுந்த, யார் அடுத்த ஆதி குணசேகரன்? என்ற நீண்டநாள் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. 

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், பிக்பாஸ் ஒளிபரப்பு தொடங்கியதுமுதல் இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. 

எதிர்நீச்சல் தொடரில் பல்வேறு பாத்திரங்கள் மக்கள் மனங்களை வென்றுள்ளன. குறிப்பாக ஆதி குணசேகரன் பாத்திரம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 

நக்கல் நிறைந்த வில்லனாக ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்துவந்தார். அவர் மறைவுக்குப் பிறகு அந்த பாத்திரத்தில் வேறு யார் நடிப்பார் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே எழுந்தது. 

ஆதி குணசேகரன் பாத்திரத்தில் மாரிமுத்து

ஆதி குணசேகரன் பாத்திரம் பலரைக் கவர்ந்ததால், அந்த பாத்திரத்தில் நடிப்பவர்கள் குறித்த தகவல்கள் பலவாறு பகிரப்பட்டன. சமூக வலைதளத்தில் பெரும் விவாதமே நடந்தது.

ஆதி குணசேகரனாக நடிப்பதாக வேல ராமமூர்த்தி - நடிகர் பசுபதி - இளவரசு - பூவிலங்கு மோகன் உள்ளிட்டோரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்தன.

இந்நிலையில், சமீபத்தில் ஆதிகுணசேகரன் அறிமுகமாவதாக முன்னோட்ட விடியோக்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ஆனால், அவற்றில் ஒன்றில் கூட ஆதி குணசேகரனாக நடிப்பது யார் என்பது தெரியாத வண்ணம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதனால், அடுத்த ஆதி குணசேகரன் யார் என்பதை தெரிந்துகொள்ள, சீரியலுக்கு அப்பாற்பட்டவர்களுக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

இதனிடையே புதன்கிழமை இன்று (அக். 4) ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில், ஆதி குணசேகரனாக நடிப்பது வேல ராமமூர்த்தி என்பது உறுதியாகியுள்ளது. ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தியின் அறிமுக காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

தனது நக்கல் நிறைந்த மிரட்டல் நடிப்பால் மாரிமுத்து வலு சேர்த்ததைப்போல, ஆதி குணசேகரன் பாத்திரத்திற்கு வேல ராமமூர்த்தியும் வலு சேர்க்கும் அளவுக்கு அடுத்தடுத்த எபிஸோட்களில் நன்றாக நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT