ஜிவி பிரகாஷின் ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு
ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் 10-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அதில் கேப்டன் மில்லர், டைகர் நாகேஸ்வர ராவ், வணங்கான் ஆகிய திரைப்பங்கள் வெளியாக உள்ளது.
இவர் கதாநாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான ‘அடியே’ திரைப்படம், கலமையான விமரிசனங்களைப் பெற்றது.
Advertisement
இதனைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் நிக்கேஷ் இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ரிபெல் படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இதையும் படிக்க: கவனம் ஈர்க்கும் ஐஸ்வர்யா லட்சுமி - புகைப்படங்கள்!
இது தொடர்பான புகைப்படத்தை ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.