செய்திகள்

இயக்குநர் ஜெயதேவி காலமானார்!

நடிகையும் இயக்குநருமாக அறியப்பட்ட ஜெயதேவி உடல் நலக்குறைவால் காலமானார்.

DIN

இதயமலர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானாவர் ஜெயதேவி. தொடர்ந்து, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அதன்பின், மற்றவை நேரில் என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நலம் நலமறிய ஆவல், விலாங்குமீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பெண்களின் சக்தி உள்ளிட்ட படங்களை இயக்கினார். தயாரிப்பாளராகவும் இருந்தவர் இறுதியாக நடிகைகள் குஷ்பு, சுஹாசினியை வைத்து  ஆனந்த லீலை என்கிற படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. 

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஜெயதேவி(65) நேற்று காலமானார். இவர் இயக்குநர் வேலு பிராகரனைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேயாத நிலா... ரேஷ்மா!

காந்த கண்ணழகி... ரோஸ் சர்தானா

பிரிட்டன் பிரதமர் கியா் ஸ்டாா்மா் இந்தியாவுக்கு வருகை..!

பிரம்மன் படைத்த சிலையோ..! பூமிகா

மாஸ்க் முதல் பாடல் அப்டேட்!

SCROLL FOR NEXT