செய்திகள்

இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் 4 தொடர்கள்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் முக்கியமான 4 தொடர்கள் வாரத்தின் அனைத்து நாள்களிலுமே ஒளிபரப்பாகவுள்ளன. 

DIN


ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில் முக்கியமான 4 தொடர்கள் வாரத்தின் அனைத்து நாள்களிலுமே ஒளிபரப்பாகவுள்ளன. 

மக்களிடம் கிடைத்த அதீத வரவேற்பு, டிஆர்பி காரணமாக சன் தொலைக்காட்சியில் ஏற்கெனவே எதிர்நீச்சல் உள்ளிட்ட தொடர்கள் வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகின்றன. 

தற்போது ஜீ தமிழும் சில முன்னணி தொடர்களை வாரத்தின் அனைத்து நாள்களுக்கும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது. அதன்படி கார்த்திகை தீபம், அண்ணா, நினைத்தாலே இனிக்கும், மீனாட்சி பொண்ணுங்க ஆகிய நான்கு தொடர்களும் இனி ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளன. 

கார்த்திகை தீபம் தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இனி ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது. 

நினைத்தாலே இனிக்கும் தொடர் இரவு 7.30 மணிக்கும், அண்ணா தொடர் இரவு 8.30 மணிக்கும், மீனாட்சி பொண்ணுங்க தொடர் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. 

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்ற தொடர்கள் இவை. இவற்றின் டிஆர்பியும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மற்ற தொடர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளதால், ஞாயிற்றுக்கிழமையும் அவை ஒளிபரப்பாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT