செய்திகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: மாமதுர பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு! 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் ஜிகர்தண்டா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார். 

இந்தப் படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி முடித்துள்ளார்.

எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வருமென படக்குழு தெரிவித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் முதல் பாடலான ‘மாமதுர’ பாடல் அக்.9ஆம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

சந்தோஷ் நாராயணின் பாடல்களுக்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக கமெண்ட்டுகளில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT