செய்திகள்

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரச்சிதா மகாலட்சுமி!

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

DIN

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.  இவர் சன் டிவியில் ஒளிபரப்பான இளவரசி தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதன்பின், விஜய் டிவியில் பிரிவோம் சந்திப்போம் மற்றும் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும், வெள்ளித் திரையிலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதா, அந்த நிகழ்ச்சியின் மூலம் அதிகமான ரசிகர்களைப் பெற்றார்.

இந்த நிலையில், தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரச்சிதா மகாலட்சுமி, தனக்கு அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

அதில், தனக்கு ஹார்மோன் பிரச்னை உள்ளது என்றும், உணவை நுகர்ந்து பார்த்தாலே உடல் எடை கூடிவிடும் என்று தெரிவித்துள்ளார். மருத்துவரை அணுகிய போது, இது அரிய வகையான  ஹார்மோன் பிரச்னை என்றும், ஆரோக்கியமான உணவு முறையின் மூலம் இந்த நோயை குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.

ரச்சிதாவின் நோய் பாதிப்பு குறித்து அவரது ரசிகர்கள் இப்படி எல்லாம் கூட நோய் உள்ளதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT