செய்திகள்

விஜய், லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்: காரணம் என்ன? 

DIN


 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிரைலர் அக். 5ஆம் தேதி வெளியானது. டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. கவனம் ஈர்க்கும் சண்டைக்காட்சிகளையும் விஜய்யின் இரு வித்தியாசமான தோற்றத்தையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

லியோ டிரைலருக்கு முன்பாக நடிகர் விஜய்யுக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் பிரச்னை என வதந்திகள் வெளியானது. பின்னர் நேர்காணல் ஒன்றில் இது குறித்து லோகேஷ் சமீபத்தில் விளக்கமளித்தார். 

“எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. பயோவில் படத்தின் சென்சார் முடிந்தப் பிறகு மட்டுமே படத்தின் பெயரினை இணைப்பேன். ஆனால் அதற்குள்ளாக ஏற்கனவே நான் லியோவினை என் பயோவில் இணைத்தாகவும் பின்னர் நீக்கியதாகவும் வதந்திகள் பரவியது. வதந்திகளுக்கு பதில் சொல்ல நேரமில்லை. எனக்கு வேலை இருந்தது. மேலும் இந்தப் பொய் செய்திகளை நானும் விஜய்ணாவும் ஒன்றாக உட்கார்ந்து பார்த்து சிரித்துக் கொண்டு இருந்தோம்” என லோகேஷ் கூறியிருந்தார்.

இது குறித்து எக்ஸில் ஒருவர் லோகேஷ் கனகராஜ் கூறியது முற்றிலும் பொய்யென கூறி பதிவிட அதை இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்தார். இது பெரும் விவாதத்தினை ஏற்படுத்தியது. பின்னர் இது குறித்து விக்னேஷ் சிவன், “நான் லோகேஷின் நேர்காணல் என்பதால் படிக்காமலே தவறுதலாக லைக் செய்துவிட்டேன். ஏனெனில் நான் லோகேஷின் தீவிர ரசிகன். அவரது பேச்சுகள் எப்போதும் சிறப்பாக இருக்கும். 

லோகேஷ் இருப்பதாலேயே லைக் செய்து விட்டேன். இதேபோல ஒருமுறை நயன்தாரா விடியோவுக்கும் லைக் செய்திருந்தேன். என்னுடைய கெட்ட நேரம் இரண்டு முறையும் நான் படிக்கவில்லை அல்லது விடியோவினையும் பார்க்கவில்லை.  இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். மன்னித்துக் கொள்ளுங்கள். 

லியோ ரிலிஸுக்கு காத்திருக்கிறேன். சிறிய தவறினை பெரிதுப்படுத்தமால் லியோவினை கொண்டாடுவோம்” என விளக்கமளித்துள்ளார். இதற்கு லோகேஷ் கனகராஜ், “சில் ப்ரோ” என பதிவிட்டுள்ளார். 

விஜய் ரசிகர்கள் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் (விடியோ)

ஜெயக்குமார் மரணம் கொலையா? தற்கொலையா? காவல்துறை விளக்கம்

இந்தோனேசியாவில் தோண்டத் தோண்ட கிடைக்கும் உடல்கள்..!

கருடன் வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT