செய்திகள்

மறைந்த மாரிமுத்துவின் வீராயி மக்கள்: முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்துள்ள வீராயி மக்கள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

DIN

மறைந்த நடிகர் மாரிமுத்து நடித்துள்ள வீராயி மக்கள் படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் வேல ராமமூர்த்தி, தீபா சங்கர், சுரேஷ் நந்தா, ராமா, ஜெரால்டு மில்டன், பாண்டி, மறைந்த நடிகர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை நாகராஜன் கருப்பையா எழுதி இயக்கியுள்ளார். சுரேஷ் நந்தியின் ஒயிட் ஸ்கிரீன் பிலிம்ஸ் பேனரில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து, உறவின் பிணைப்புகள் மற்றும் உறவினர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் படமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொருள் இன்பத்தை விட மனிதநேயம் மற்றும் உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதுதான் இப்படத்தின் கருத்து எனவும், தற்போது டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும், படத்தை டிசம்பரில் வெளியிட இருப்பதாகவும் இயக்குனர்  தெரிவித்துள்ளார்.

வீராய் மக்கள் படத்தை இயக்க தன்னைத் தூண்டிய படங்கள் பற்றி இயக்குனர் கூறுகையில், “பாண்டவர் பூமி, மாயாண்டி குடும்பத்தார், கிழக்கு சீமையிலே போன்ற படங்களைப் போல குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் படம் இது,” என்றார்.

இப்படத்துக்கு தீபன் சக்ரவர்த்தி இசையமைத்துள்ளார்.  சீனிவாசன் ஒளிப்பதிவாளராகவும், முகன் வேல் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT