முகப்பு
செய்திகள்

ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தை இயக்க விரும்புகிறேன்: அட்லி  

அட்லி இயக்கத்தில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1117.39 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 4:27 PM
பகிர்:

இயக்குநர் அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகினார். அனிருத் இசையமைத்த இப்படத்தில்  நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் செப்.7ஆம் தேதி உலகம் முழுவதும் 4,500 திரைகளில் வெளியானது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரான இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. கலவையான விமர்சனங்கள் வந்தாலுமே படத்தின் வசூலுக்கு பாதிப்பில்லை. ஜெட் வேகத்தில் வசூலித்து வருகிறது ஜவான். 

உலகம் முழுவதும் 32வது நாளில் ரூ.1117.39 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஹிந்தி திரைப்படம் இவ்வளவு வசூலித்துள்ளதாக படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் அட்லி, “ரூ.3000 கோடி வசூல் ஈட்டும் படத்தை இயக்க விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்த அவர்களது படங்களை இயக்க வாய்ப்பளித்த விஜய் சார், ஷாருக்கான் சாருக்கு நன்றி. விஜய் சார், ஷாருக்கான் சார் இணைந்து நடித்தால் அந்தப்படம் ரூ.3000 கோடி வசூலிக்கும்” எனக் கூறியுள்ளார்.

அட்லிக்கு ஹாலிவுட்டில் இயக்க வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல்  வெளியாகியது. அட்லி தனது அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →