தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். தொடர் சிகிச்சைக்கு பிறகு ஓரளவு அதிலிருந்து மீண்டுள்ளார்.
இதையும் படிக்க: லியோவில் விஜய் சம்பளம் இவ்வளவா?
யசோதா, சாகுந்தலம் படங்களைத் தொடர்ந்து, விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா நடித்த குஷி என்ற படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காக அமெரிக்கா மற்றும் தென் கொரியா நாடுகளுக்குச் செல்ல உள்ளதால் ஒரு ஆண்டு வரை சினிமாவிலிருந்து விலகி இருக்க சமந்தா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சமந்தா தன் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ரசிகர்களைக் கவர்ந்த இப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.