செய்திகள்

விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு!

விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

DIN

விஷால் 34 படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மார்க் ஆண்டனி. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். டைம் டிராவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருந்தது.

மார்க் ஆண்டனி திரைப்படம் ரூ.100 கோடியை வசூலித்துவிட்டதாக சினிமாத்தளம் ஒன்று குறிப்பிட்டது. இதனை, தயாரிப்பாளர் வினோத் தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில், நடிகர் விஷால் இயக்குநர் ஹரியுடன் 3வது முறையாக இணைந்துள்ளார். இதற்கு முன்னதாக 2007இல் இந்த கூட்டணியில் வெளியான தாமிரபரணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்தது. பின்னர் 2014இல் வெளியான பூஜை திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சர்ஸ், ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ‘விஷால் 34’ என பெயரிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் இப்படத்திற்கு பூஜை போடப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 15 ஆம் தேதி துவங்கப்பட்டது. இப்படத்தில் பிரியா பவானிசங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்து இருந்தனர்.

மேலும், இப்படத்தில் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்புராயன் பணியாற்றி இருந்த நிலையில், படத்தின் கிளைமேக்ஸ் சண்டை காட்சிக்காக கனல் கண்ணன் இணைந்துள்ளார். இதை விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT