செய்திகள்

சிகிச்சை தேவையில்லை! பயணம் போதும்!! எதிர்நீச்சல் நடிகை பகிர்ந்த விடியோ

இந்த விடியோ பலரால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதால், பலரும் ஸீபா விடியோவைப் பகிர்ந்து கருத்துகளைக் குறிப்பிட்டு வருகின்றனர். 

DIN

சில விஷயங்களுக்கு சிகிச்சை தேவையில்லை, பயணம் மட்டுமே போதுமானது என்பதைக் குறிப்பிடும் வகையில், எதிர்நீச்சல் தொடர் நடிகை ஸீபா ஷெரின் விடியோ பகிர்ந்துள்ளார். 

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர் எதிர்நீச்சல். மற்ற தொடர்களைக் காட்டிலும் அதிக மக்களைக் கவர்ந்து டிஆர்பி பட்டியலில் முதன்மையான இடத்தில் எதிர்நீச்சல் தொடர் உள்ளது.

இந்தத் தொடரை இயக்குநர் திருச்செல்வம் இயக்குகிறார். இவர் இந்தத் தொடரில் ஜீவானந்தம் என்ற பாத்திரத்திலும் நடிக்கிறார். அவருக்கு உதவியாளராக ஃபர்ஹானா பாத்திரத்தில் நடிப்பவர் நடிகை ஸீபா ஷெரின். 

இவர் இஸ்லாமியர் என்பதால் ஹிஜாப் அணிந்தவாறு எதிர்நீச்சலில் நடித்துவருகிறார். அதற்கேற்ப அவரின் பாத்திரமும் இஸ்லாமிய பெண் பாத்திரமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதன்மூலம் ஹிஜாப் அணிந்தவாறு நடிக்கும் முதல் இஸ்லாமிய நடிகை என்ற பெருமையை ஸீபா பெற்றுள்ளார். இதற்காக பலதரப்பிலிருந்து பாராட்டைப் பெற்றவர் ஸீபா. 

இவர் சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர். அவ்வபோது புகைப்படங்கள், விடியோக்களைப் பதிவிட்டு ரசிகர்களைக் கவரத் தவறுவதில்லை.

ஃபர்ஹானா பாத்திரத்தில் நடிகை ஸீபா ஷெரின்

அந்தவகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள விடியோவில், அதிக வேலை பளு காரணமாக சோர்வாக இருப்பதாகவும், ஆனால் அதற்காக மருத்துவரை அணுக வேண்டியதில்லை, விமான பயணச்சீட்டு பதிவு செய்து பயணம் சென்றுவந்தாலே போதுமானது என அந்த விடியோவில் குறிப்பிட்டுள்ளார். 

வேலை பளுவிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பலரின் விருப்பமாக பயணம் சென்றுவருவது இருக்கிறது. அந்த விடியோ பலரால் தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதால், பலரும் ஸீபா விடியோவைப் பகிர்ந்து கருத்துகளைக் குறிப்பிட்டு வருகின்றனர். 

ஸீபா ஷெரின் அடிக்கடி பயணம் செல்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT