நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படம் வருகின்ற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், விஜய் பேசியிருந்த தகாத வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது டிரைலரில் அந்த வார்த்தை ‘மியூட்’ செய்யப்பட்டுள்ளது.
லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டது. அதில், நடிகர் விஜய் என்பதற்கு பதிலாக ‘தளபதி விஜய்’ என குறிப்பிட்டிருந்ததும் சர்ச்சையானது.
இதையும் படிக்க: ஓடிடியில் மார்க் ஆண்டனி!
இந்நிலையில், சென்னையின் சில திரையரங்குகளில் லியோ படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் விலையைக் கடுமையாக உயர்த்தியுள்ளதாகத் தெரிகிறது. படத்தின் வெளியீட்டு உரிமத்தை அதிக தொகை கொடுத்து வாங்கிய திரையரங்கங்கள் சென்னையில் ரூ.3000 முதல் ரூ.5000 வரை ரசிகர் காட்சி டிக்கெட்களை விற்பதாகவும் மற்ற பகுதிகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.1000 பெறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அரசு நிர்ணயித்த டிக்கெட் விலையை திரையரங்க உரிமையாளர்கள் பின்பற்றினாலும் ரசிகர் காட்சிகளில் அதிக தொகைக்கு டிக்கெட்களை விற்பதை இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலையே ஏற்படுவதாக பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.