நடிகை நயன்தாரா ஜவான் வெற்றிக்குப் பின் மண்ணாங்கட்டி என்கிற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, சஞ்சய் லீலா பன்சாலி படத்திலும் முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், நயன்தாரா சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருடன் இணைந்து தோல் பராமரிப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி செய்யும் தொழிலை துவங்கியுள்ளார். 9 ஸ்கின் எனப் பெயரிப்பட்டுள்ள இந்நிறுவனத்தின் துவக்க விழா செப்.29 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. இதற்கான, விளம்பரங்களையும் நயன்தாரா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்சிப்படுத்தி வருகிறார்.
இதையும் படிக்க: வசூலில் கலக்கும் கண்ணூர் ஸ்குவாட்!
இந்நிலையில், நயன்தாரா நடிகை சமந்தாவுக்கு தன் நிறுவன அழகுசாதனப் பொருள்களைப் பரிசளித்துள்ளார். இதனைத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த சமந்தா, ‘இந்தப் பொருள்களைப் பயன்படுத்த ஆவலாக இருக்கிறேன். வாழ்த்துக்கள்’ என தெரிவித்திருந்தார். அதற்கு, நயன்தாரா. ‘நன்றி அழகே’ பதிலளித்தார்.
விஜய் சேதுபதியுடன் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாராவும் சமந்தாவும் இணைந்து நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நெருங்கிய தோழிகளாக இருப்பதால் தன் நிறுவன அழகுசாதனப் பொருள்களை சமந்தாவுக்கு வழங்கி மகிழ்ச்சியைத் அடைந்துள்ளார் நயன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.