செய்திகள்

ஒரே டிஆர்பி பெற்ற 2 சீரியல்கள்! எவை தெரியுமா?

6வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. 

DIN

தமிழ் சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. வாராவாரம் வெளியாகும் இந்த டிஆர்பி பட்டியலில் சமமான புள்ளிகளைப் பெற்று ஒரே இடத்தை இரண்டு தொடர்கள் பிடித்துள்ளன. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது. இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் கதைக்களம் அமைக்கப்படுகிறது. 

எனினும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்கள் டிஆர்பியில் சன் தொலைக்காட்சி தொடர்களை முந்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

இந்த வாரம் வெளியாகியுள்ள டிஆர்பி பட்டியலில் முதல் 5 இடங்களில் வழக்கம்போல சன் தொலைக்காட்சித் தொடர்களே உள்ளன. முதலிடத்தில் எதிர்நீச்சல், 2வது இடத்தில் கயல், 3வது இடத்தில் சுந்தரி, 4வது இடத்தில் வானத்தைப் போல, 5வது இடத்தில் இனியா ஆகிய தொடர்கள் உள்ளன. 

இதற்கு அடுத்தபடியாக 6வது இடத்தில் விஜய் தொலைக்காட்சியின் சிறகடிக்க ஆசை தொடர் உள்ளது. 

7வது இடத்தில் இரு தொடர்கள் இடம்பெற்றுள்ளன. பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய இரு தொடர்களும் சமமான டிஆர்பி பெற்றுள்ளன. இதனால், 7வது இடத்தில் இந்த இரு தொடர்களும் உள்ளன. 

8வது இடத்தில் ஆனந்த ராகம் (சன் டிவி), 9வது இடத்தில் ஆஹா கல்யாணம் (விஜய் டிவி), 10வது இடத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் கார்த்திகை தீபம் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT